உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பேச்சு; நீதிபதிகள் தங்கள் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும்: ஜெகன் புகாருக்கு பின் முதல்முறையாக கருத்து

புதுடெல்லி:  ‘நீதிபதிகள் தங்கள் கொண்ட கொள்கையில் உறுதியுடனும், தங்களின் முடிவுகளில் அச்சமின்றியும் இருக்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா கூறி உள்ளார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திர அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி, இம்மாநில  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். இது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நீதிபதி ரமணா, முதன்முதலாக நேற்று பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி காலமானார்.

டெல்லியில்  நேற்று நடந்த அவரது இரங்கல் கூட்டத்தில் நீதிபதி ரமணா பேசியதாவது: நீதித்துறையின் மிகப்பெரிய பலம், அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான். நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவை யாரும் கட்டளையிட்டு வருவதில்லை. அவற்றை நாம் சம்பாதிக்க வேண்டும். எனவே, நீதிபதிகள் தங்கள் கொள்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும். அனைத்து அழுத்தங்களையும், முரண்பாடுகளையும் தாங்கிக் கொண்டு தங்களின் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: