11.14 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.99 கோடி ஆக உயர்வு: 71,934 பேர் கவலைக்கிடம்.!!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 99 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த  வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 99  லட்சத்து 38 ஆயிரத்து 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 87 லட்சத்து 76 ஆயிரத்து 567 பேர் சிகிச்சை பெற்று  வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்து 934 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 98 லட்சத்துக்கும் 80 ஆயிரத்து 480 பேர்  குணமடைந்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 8,342,665

இந்தியா - 7,492,727     

பிரேசில் - 5,224,362

ரஷியா - 1,384,235

ஸ்பெயின் - 982,723

அர்ஜெண்டினா - 979,119

கொலம்பியா - 952,371

பெரு - 865,549

மெக்சிகோ - 847,108

பிரான்ஸ் - 867,197     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 224,282

பிரேசில் - 153,690

இந்தியா - 114,064

மெக்சிகோ - 86,059

இங்கிலாந்து - 43,579

இத்தாலி - 36,474

பெரு - 33,702

ஸ்பெயின் - 33,775

பிரான்ஸ் - 33,392

ஈரான் - 30,123

கொலம்பியா - 28,803

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 6,594,399

அமெரிக்கா - 5,432,192

பிரேசில் - 4,635,315

ரஷியா - 1,065,199

கொலம்பியா - 847,467

பெரு - 774,356

அர்ஜெண்டினா - 791,174

தென் ஆப்ரிக்கா - 630,436

Related Stories: