தெலுங்கானா எம்.எல்.ஏ. மன்சிரெட்டி மீது காலணிகள் வீச்சு.: உரிய நேரத்தில் நிவாரணம் வழங்காததால் பொதுமக்கள் ஆத்திரம்

தெலுங்கானா: தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்குகிறது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக எம்.எல்.ஏ. மன்சிரெட்டி சென்று இருந்தார்.

அப்போது மடிப்பள்ளி என்ற இடத்துக்கு எம்.எல்.ஏ. மன்சிரெட்டியை முற்றிகையிட்ட 100-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ. மன்சிரெட்டி மீது காலணிகளை வீசியதுடன் அவரது வாகனத்தையும் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

எம்.எல்.ஏ. மன்சிரெட்டி மீதான தாக்குதலால் அந்த பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்து கலைந்து செல்லுமாறு பொதுமக்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டதால் தடியடி நடத்திய காவல்துறையினர், முற்றுகையாளர்களை விரட்டி அடித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: