தேனியில் ஓபிஎஸ் -செல்லூர் ராஜூ ரகசிய சந்திப்பு

தேனி: அதிமுகவில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஒரு கோஷ்டியும், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைைமயில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். துணை முதல்வரும் சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டு பிரச்னை முடிந்தது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தேனி வந்தார். விருந்தினர் மாளிகையில் இருந்த துணை முதல்வரை, அமைச்சர் சந்திக்காமல், பழனிசெட்டிபட்டியில் உள்ள  தனியார் ஓட்டலில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்பின் ரகசியம் என்ன, எதற்காக நடந்தது என தெரியவில்லை. இதனால், தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: