பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளியிடம் போலீஸ் காவலில் விசாரணை: 19ம் தேதி நடக்கிறது

சென்னை: தாவூத் இப்ராஹிம் மற்றும் பல சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களின் நேரடி தொடர்பில் இருந்த இலங்கையை சேர்ந்த முக்கிய குற்றவாளியிடம் திங்கட்கிழமை போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது. கட்டகாமினி என்ற அந்த குற்றவாளி, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 6 மாதமாக தங்கியிருந்தார். பின்னர் பெங்களூருக்கு தப்பி சென்று விட்டார். காஞ்சிபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து, நேற்று முன்தினம் இரவு கட்டகாமினியை கைது செய்தனர். அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி கூறுகையில், இலங்கையில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 15 வழக்கு பொன்சேகா மீது உள்ளது. அவை குறித்து இலங்கையிடம் கேட்டுள்ளோம். இவர் எல்டிடி ஆதரவாளர் இல்லை. சிங்களத்தவர். இவரை வரும் திங்கள் கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம் என்றார்.

Related Stories: