தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பாஜ நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை:கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சி.டி.ரவி. இவருக்கு அண்மையில் பாஜவின் தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் முறையாக சி.டி. ரவி நேற்று சென்னை வந்தார். தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், பாஜ துணை தலைவர்கள் எம்.என்.ராஜா, சக்ரவர்த்தி, பொது செயலாளர் கருநாகராஜன், மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழக பாஜ தலைவர் எல்.முருகனுடன் சி.டி.ரவி முக்கிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று காலை அவர் பாண்டிச்சேரிக்கு செல்கிறார். அங்கு பாஜ நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் அவர் மீண்டும் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை கமலாலயம் வருகிறார். அங்கு தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜ குறிப்பிட இடங்களை பிடிக்க வேண்டும். சி.டி.ரவி தான் தமிழக பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார். அவர் தான் தமிழகத்தில் பாஜ கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டவுடன் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: