மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை நாளை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது. அவரது பிறப்பு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.

வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி நாணயத்தை வெளியிட உள்ளார். இந்நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: