தொல்லியல் படிப்பில் தமிழ் பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை: தொல்லியல் படிப்புக்கான தகுதிப் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டதற்கு பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  நொய்டாவில் உள்ள  பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் நிறுவனத்தின் 2020-22ம் ஆண்டிற்கான இரண்டு ஆண்டு முதுகலை டிப்ளோமா தொல்பொருள்  பாடநெறிக்கான குறைந்தபட்ச தகுதியில் ஒன்றாக தமிழில் முதுகலை பட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு உடனடியாக  பதிலளித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: தவறு திருத்தப்பட்டது தமிழுக்கு கிடைத்த வெற்றி. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு  முறையும் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது. எந்த ஒரு மொழியின் பெருமையும் யாராலும்  மறைக்க முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: