கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற கூடுதல் துணை கமிஷனர் வசுந்தரா உயிரிழந்தார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற கூடுதல் துணை கமிஷனர் வசுந்தரா நேற்று ஓமந்தூரார் அரசு  மருத்துவமனையில் உயிரிழந்தார்.சென்னை போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்தவர் வசுந்தரா(64). இவர் தமிழக காவல் துறையில் கடந்த 1981ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில்  சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கூடுதல் துணை கமிஷனராக உயர்ந்தார். கடைசியாக மாநகர காவல் துறையில் மத்திய  குற்றப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.இந்நிலையில் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்தார்.

பரிசோதனை முடிவில் கடந்த மாதம் 22ம் ேததி அவருக்கு கொரோனா  தொற்று இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து கடந்த 23ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை ெபற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். பின்னர் மருத்துவர்கள் உயிரிழந்த வசுந்தராவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று  இல்லை என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து அவரது சகோதரர் சேதுராமனிடம் டாக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வசுந்தரா உடலை ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து  வசுந்தராவின் உடலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.

Related Stories: