சீனா அதிக விலையை தர நேரிடும்: கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன்...அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.!!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா இருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த வியாழன்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து டிரம்ப்புக்கு தரப்பட்டது.

இருப்பினும் ட்ரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வெள்ளை மாளிகைக்கு வந்தார். வெள்ளை மாளிகை முன்பு கூடியிருந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து டிரம்ப் கையசைத்தார். அப்போது அவர் திடீரென முகக்கவசத்தை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தனது உடல்நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போன்று இருப்பதாக உணர்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஓவல் அலுவலகத்திற்கு வெளியே படமாக்கப்பட்ட வீடியோ செய்தியில், டொனால்ட் டிரம்ப் தன்னை உங்களுக்கு பிடித்த ஜனாதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருக்கு சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருந்துகள் குறித்து பேசினார்.

நான் ஒரு நாள் முன்பு வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து திரும்பி வந்தேன். நான் நான்கு நாட்கள் அங்கேயே கழித்தேன். மேலும் .. நான் செய்ய வேண்டியதில்லை. நான் வெள்ளை மாளிகையில் தங்கியிருக்க முடியும், ஆனால் மருத்துவர்கள் சொன்னார்கள், நீங்கள் ஜனாதிபதியாக இருப்பதால், அதைச் செய்வோம் என்றார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கான மருத்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக் கொடுத்துள்ளார். கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும் என்றார்.

 நாங்கள் இந்த மருந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் போகிறோம், எங்கள் இராணுவம் விநியோகத்தைச் செய்யப் போகிறது. இது இலவசமாக இருக்கும், அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம், இது சிகிச்சையை விட அதிகமாக இருக்கும் என்று கூறினார்.

அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு தடுப்பூசி போட அரசியல் அனுமதிக்காது என்று டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார். நாங்கள் மிக விரைவில் ஒரு தடுப்பூசி போடப் போகிறோம். தேர்தலுக்கு முன்னர் நாங்கள் அதை வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரசியல் ஈடுபடுகிறது, அது சரி, அவர்கள் தங்கள் விளையாட்டுகளை விளையாட விரும்புகிறார்கள். எனவே அது தேர்தலுக்குப் பிறகு சரியாக இருக்கும் என்றார்.

Related Stories: