மீஞ்சூர் அருகே இறால் பண்ணை கோஷ்டி மோதலில் 7 பேர் கைது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல்என்டி நிறுவனத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கும் அப்பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருபவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 30ம் தேதி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை தடுக்க பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்ஐ விஷ்ணு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இருதரப்பினர் மீதும் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் போலீசார் வருவாய்த்துறை விசாரணையில், கம்பெனி வாசலில் நின்றிருந்த 7 பைக்குகள் அலுவலகத்திலிருந்து 7 கம்ப்யூட்டர், சிசிடிவி கேமராக்கள், ஜெராக்ஸ் மெஷின், பிரிட்ஜ், ஏசி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார், சன்குமார், லால்பகதூ ரான், சஞ்சய் ராம், சோட்டான் குமார், புராராம், அர்ஜுன்குமார்  ஆகிய 7 பேர் மீது காட்டூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். 

Related Stories: