சபரிமலையில் 16 முதல் பக்தர்கள் அனுமதி: தினமும் 250 பேர் தரிசிக்கலாம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா ஊரடங்கால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, சபரிமலையிலும் நவம்பரில் தொடங்கும் மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக, சோதனை அடிப்படையில் வரும் 16ம் தேதி முதல் தொடங்க உள்ள ஐப்பசி மாத பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க, முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories: