நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணிக்கு மெதுவாக பந்து வீசியதாக ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்துக்கு 12 லட்சம் அபராதம்

அபுதாபி: நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை அணியுடன் ராஜஸ்தான் அணி மோதியது. எனவே இந்த போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் கேப்டன் விராட் கோலி, டெல்லி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டீஙை தேர்வு செய்து முதலில் களமிறங்கயது. எனவே 20 ஓவர்களில் 4 வி்க்கெட் இழப்பிற்கு 193 ரன்களை மும்பை அணி குறித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.

Related Stories: