மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள்: திட்ட இயக்குனர் ஆய்வு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் ஊராட்சி நவக்கொல்லை பகுதியில், மலைவாழ் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கூரை வீடு கட்டி வசித்து வரும் இவர்கள், தங்களுக்கு அரசு சார்பில் பசுமை வீடு கட்டித்தர வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவரது உத்தரவின்பேரில், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, நேற்று முன்தினம் பி.குயிலம் ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர், தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.32 கோடி மதிப்பில் பசுமை வீடு ஒதுக்கப்பட்ட 44 பயனாளிகளிடம், வீடு கட்டும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கூறினார். அப்போது, பிடிஓ கோவிந்தராஜூலு, பொறியாளர்கள் தணிகாசலம், சிவக்குமார், ஊராட்சி தலைவர் சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

செங்கம்: செங்கம் ஒன்றியம் புதுப்பட்டு, சென்னசமுத்திரம், காயம்பட்டு ஆகிய கிராம ஊராட்சிகளில் நடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பிரதம மந்திரி திட்டத்தில் வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: