கொரோனா ஊரங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகையை திருப்பி தர விமான நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிக்கெட் கட்டணத்தை திருப்பித்தருமாறு விமான நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணத்தை திருப்பி தர கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. ரத்தான டிக்கெட்டுக்கு பதிலாக 2021 மார்ச் வரை வேறொரு நாளில் பயணிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஏஜெண்டுக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகை, ஏஜெண்டுகள் மூலமே திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானத்தில் முன்பதிவு செய்த  வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் திரும்பி அளிக்கப்படாது. ஆனால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் அதே கட்டத்தில் எப்போ வேண்டுமானாலும் பயணம் செய்துக்கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

Related Stories: