பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் செரீனா

பாரீஸ்: அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார். முதல் சுற்றில் சக வீராங்கனை கிறிஸ்டி ஆனை 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட்களில் செரீனா தோற்கடித்தாலும், முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை இழுபறியாக நீடித்ததால் கடுமையாகப் போராடிதான் வென்றார். இந்நிலையில் 2வது சுற்றில் பல்கேரியா வீராங்கனை ஸ்வெடனா பிரோன்கோவாவை நேற்று எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து களத்தில் இருந்து வெளியேறினார்.

குதிகாலுக்கு மேலே தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்கவே செரீனா சிரமப்படுகிறார். இது குறித்து செரீனா கூறுகையில், ‘நடக்கவே சிரமமாக இருக்கிறது. காயத்தை சரிச் செயய முயற்சிக்க வேண்டும். குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும். வேறு எதையும் செய்ய முடியாது. இந்த ஆண்டு மற்றொரு  போட்டியில் விளையாட மாட்டேன்’ என்றார். 39வயதான செரீனா இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் 3 முறை கோப்பையை முத்தமிட்டுள்ளார்.

Related Stories: