பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு : இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்யவதற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். .செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான பீகார் தேர்தலுக்கு மிகப்பெரிய ஏற்பாடு செய்ய வேண்டும். பீகார் சட்டமன்றத்தின் ஆயுள் காலம் நவம்பர் 29 உடன் முடிவடைகிறது. பீகாரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.29 கோடி.பீகார் தேர்தலுக்கு 1,89,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்கப்படும். வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கவச உடை, முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: