திருப்பதி 6ம் நாள் பிரம்மோற்சவ விழா!: தேரோட்டத்திற்கு பதிலாக சர்வபூபால வானகத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா..!!

ஆந்திரா: திருப்பதியில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி கோலகலமாக பூசைகள் நடைபெறும். அதிலும், புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பான முறையில் பிரம்மோத்சவ விழா கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸின் தாக்கத்தால், பக்தர்கள் இன்றி, வெளிப் பிராகரத்தில் வீதி உலா இல்லாமால் ஆலயத்திற்குள்ளேயே விழா கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இணைந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவையானது நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. சர்வ திருவாபரண அலங்காரத் திருக்‍கோலத்தில் காட்சியளித்த சுவாமிக்‍கு தீபாராதனை மற்றும் நைவேத்தியம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ம் நாள் மாலை தங்க ரத்தத்தில் சுவாமி வீதிஉலா வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக தங்கத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தங்கத் தேரோட்டத்திற்கு பதிலாக சர்வபூபால வானகத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்தார்.

Related Stories: