பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரது பெருமைகளையும், புகழையும் போற்றி நினைவு கூர்கிறேன்: ஓபிஎஸ்

சென்னை: பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரது பெருமைகளையும், புகழையும் போற்றி நினைவு கூர்கிறேன் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். விளையாட்டு, கல்வி, தொழில் என பல துறைகளில் சாதனை படைத்தவர் பா.சிவந்தி ஆதித்தனார் என கூறினார். மேலும் விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் பா.சிவந்தி ஆதித்தனார் என தெரிவித்தார். பாமரருக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் பா.சிவந்தி ஆதித்தனார் என புகழாரம் சூட்டினார்.

Related Stories: