பீகாரில் முன்னாள் டி.ஜி.பி., பா.ஜ.க., வேட்பாளராக போட்டி? - நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்ததாக கூறி அரசியலில் ஈடுபட வியூகம்!!!

பாட்னா:  நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் பீகார் மாநில டி.ஜி.பி., பாரதிய ஜனதாவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். பீகார் மாநில போலீஸ் அதிகாரி குப்தேஷ்வர் பாண்டேவின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை பீகார் அரசு நேற்று ஏற்றுக்கொண்டது. 3 மாத நோட்டீஸ் கால அவகாசத்திலிருந்தும் அவருக்கு விலக்கு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பாட்னாவில் பேசிய அவர், தமது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட மக்களின் கருத்தை கேட்ட பிறகே தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வேன் என்றார். மேலும் இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை என்று குப்தேஷ்வர் பாண்டே குறிப்பிட்டார்.

ஆனால் சாக்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா வேட்பாளராக  குப்தேஷ்வர் பாண்டே போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மும்பைக்கு விசாரணை குழுவை அனுப்பி விரைவாக நடவடிக்கை எடுத்தவர் என்று அவருக்கு பாராட்டு கிடைத்தது. மேலும், நடிகை ரியா சக்கரவர்த்தியை கடுமையாக விமர்சித்தவர் குப்தேஷ்வர் பாண்டே. அதாவது முதல்வர் நிதீஷ் குமார் குறித்து விமர்சிக்க தகுதியற்றவர் ரியா என குப்தேஷ்வர் பாண்டே சாடினார். எனவே மண்ணின் மைந்தர் என்ற பெயருடன் பீகார் அரசியல் களத்தில் குதிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

Related Stories: