சில்லி பாயின்ட்...

* டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இரு அணிகளுமே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்ததால் ‘டை’ ஆனது. இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில் டெல்லி அணி வெற்றியை வசப்படுத்தியது. இந்த போட்டியின் 19வது ஓவரில் டெல்லி வீரர் ஜார்டன் எடுத்த 1 ரன் செல்லாது (ஒன் ஷார்ட்) என நடுவர் அறிவித்தார். ஆனால், டிவி ரீப்ளேயில் அவர் கிரீசுக்கு உள்ளே பேட்டை வைத்துச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. நடுவரின் இந்த தவறான முடிவால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பாதிக்கக் கூடும் என்று கூறி பஞ்சாப் அணி நிர்வாகம் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

* ஒன் ஷார்ட்’ என தவறான முடிவை அறிவித்த கள நடுவர் நிதின் மேனன் தான் உண்மையான ‘ஆட்ட நாயகன்’ என்று முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர சேவக் நகைச்சுவையுடன் விமர்சித்துள்ளார்.

* பஞ்சாப் அணியுடனான போட்டியில் டெல்லி ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி 2 விக்கெட் கைப்பற்றிய நிலையில், பீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேற நேரிட்டது. அடுத்த போட்டியில் விளையாட அவர் தயாராக இருந்தாலும், இது குறித்து அணி மருத்துவர் முடிவை எதிர்பார்ப்பதாக கேப்டன் ஷ்ரேயாஸ் கூறியுள்ளார்.

* மலபார் கிறித்துவக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வசிஷ்ட், ஐபிஎல் தொடரில் களமிறங்கும் 8 அணிகளைப் பற்றிய கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories: