உத்திரமேரூர் அருகே பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் முற்றுகை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பாலாற்றின் குறுக்கே பினாயூர் மற்றும் உள்ளாவூர் இடையே தடுப்பணை கட்ட தமிழக முதலமைச்சர் கடந்த  மாதம் காணொலி காட்சி மூலம், பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதற்காக உள்ளாவூர் பாலாற்றங்கரையில் பூமி பூஜை போடப்பட்டது.  பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டினால் பினாயூர், அரும்புலியூர், சீத்தாவரம், சாலவாக்கம் உள்ளாவூர், பாலூர் மற்றும் சுற்றியுள்ள நீர்நிலைகள் நிரம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர் ஆதாரம் உயர்வு ஏற்படும்.

இந்நிலையில் பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணையை கட்டாமல், அங்கிருந்து சுமார் 2 கிமீ முன்னதாகவே பாலாற்றின் குறுக்கே திருமுக்கூடல் மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் கால்வாய்களில் நீர் செல்ல வழியின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே தடுப்பணைக்கு பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணையை கட்ட வேண்டும் என வலியுறுத்தி பாலாற்றங்கரை அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடுப்பணை பணிகளை தடுத்தி நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: