மேற்குத்தொடர்ச்சியில் கனமழை; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

கம்பம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக,  சுருளி அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி வனப்பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் நீர் ஊற்றுகளில் நீர்வரத்து பெருகி, சுருளி அருவியில்  நீர்வரத்து அதிகமாகியுள்ளது.

தற்போது அருவியில் ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வர கடந்த 5 மாதமாக தடை உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை ெபய்வதன் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அருவி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: