வடமாநிலத்துக்கு போனது.. திரும்பவேயில்லை: பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் நவீன ரயில் பெட்டிகள் மாயம்

தென்காசி: . சென்னை- செங்கோட்டை மார்க்கத்தில் பொதிகை எக்ஸ்பிரசும், சென்னை- நெல்லை மார்க்கத்தில் நெல்லை எக்ஸ்பிரசும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்விரு ரயில்களும், தென்மாவட்ட பயணிகளிடம் அதிக வரவேற்பு  பெற்றவை.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்த இரு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரசின் 23 கோச் பெட்டிகள், ஜார்க்கண்ட்  மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து மும்பை நாக்பூர் ரயில் நிலையம் சென்றடைந்தது. அவ்வாறு அனுப்பப்பட்ட 23 நவீன பெட்டிகளைக் கொண்ட ரயிலானது இன்று வரை திரும்பி வரவேயில்லை.

இதனால் நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்று ரயில்கள் எல்எச்பி நவீன கோச்சுகளாக உள்ள நிலையில், நான்காவது ரயிலில் ரேக் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என அதிகாரிகள் கூறுகின்றனர். ரயில்வே நிர்வாகம் உறுதி கூறியபடி வேறு ஒரு எல்எச்பி ரயில் பெட்டிகள் வந்துவிட்டால் அக்.2 முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க உத்தேசித்துள்ளதாக உறுதி  செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவேலு படத்தில் வரும் கிணத்த காணோம் என்பது குளத்தை காணோம் மாதிரி இப்போது போன ரயிலையே காணோமே என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: