திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிப்பு தீவிரம்

திருவில்லிபுத்தூர்: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் மாதத்தின் 30 நாட்களிலும் பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு செல்வார்கள். மேலும் தங்களது வீடுகளில் மற்றும் அருகே உள்ள பல்வேறு கோயில்களில் புரட்டாசி மாதம் 30 நாளும் வண்ண, வண்ணமயமான சிறிய மற்றும் பெரிய அளவிலான கோலங்களை போடுவதும் வழக்கமாக உள்ளது.

இதற்காக திருவில்லிபுத்தூர் நகரில் பல கலர்களில் கோலப்பொடி தயாரிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மடவார்வளாகம் பகுதியை சேர்ந்த கண்ணன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, புரட்டாசி, ,தை மாதங்களில் உள்ளூரில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் போது அதிகளவில் கலர் கோலப்பொடியை ஏராளமானோர் வாங்கிச் செல்வார்கள். எனவே, நாங்கள் சுமார் 20 கலரில் கோலப்பொடிகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஒரு ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலான கலர் கோலப்பொடி பாக்கெட் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Related Stories: