ராக்லாண்ட் அருகே வனத்துறை சார்பில் தடுப்பணை சீரமைப்பு

ஊட்டி : ஊட்டி-மஞ்சூர் சாலையில் ராக்லாண்ட் அருகே வனப்பகுதியில் போதிய பராமரிப்பின்றி இருந்த தடுப்பணை வனத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தற்போது கோடை வெயில் நிலவி வரும் நிலையில் வனங்களில் உள்ள நீர் நிலைகள் வற்ற துவங்கியுள்ளன. வனங்களில் உள்ள பல தடுப்பணைகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அவற்றில் மண் குவிந்து காணப்படுவது மட்டுமின்றி, சிறு சிறு துளைகள் ஏற்பட்டு அவற்றில் தண்ணீர் கசிந்து வீணாகி வருகின்றன. இதனால் அவற்றை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அவ்வப்போது வனத்துறை மூலம் அவை புனரமைக்கப்படுவது வழக்கம். குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சூர் சாலையில் ராக்லேண்ட் பகுதியில் தடுப்பணை ஒன்று பராமரிப்பின்றி காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறை மூலம் தடுப்பணை புனரமைக்கப்பட்டு புது பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

Related Stories: