மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் தெரு நாய், மாடுகள் சுற்றுவதால் அச்சத்தின் பிடியில் பொதுமக்கள்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலம் 10வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்ட தெருவில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலைகளில் பெண்கள், வயதானவர்கள் உள்பட பலர் நடை பயிற்சி கொள்கின்றனர். மாணவர்கள், வாலிபர்கள் ஆகியோர் வாலிபால், பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மைதானத்தில் ஏராளமான தெருநாய்களும் எருமை மாடு, பசுமாடுகள் உள்பட ஏராளமான மாடுகளும் சுற்றி திரிகின்றன. இதனால் நடைபயிற்சி செல்லும் மாணவ, மாணவிகள், பெரியவர்கள், சிறுவர், சிறுமிகள் ஆகியோர் அச்சத்துடன் செல்கின்றனர்.

சில நேரம் நாய்கள் ஓடிவந்து வாக்கிங் செல்கின்றவர்களை கடித்து விடுவதாக தெரிகிறது. இதனால் மைதானத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மாடுகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்னர். மேலும் இந்த மைதானத்துக்குள் மாடுகள், நாய்கள் நுழையாத வண்ணம் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சில நாட்களுக்கு முன், திருவொற்றியூர் கிராமத் தெருவில் நடந்துசென்ற மதுமதி என்ற பெண்ணை எருமை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

The post மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் தெரு நாய், மாடுகள் சுற்றுவதால் அச்சத்தின் பிடியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: