திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் மாணிக்கம் நகரில் நடைபெற்றது. இதற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை. ம.அருள்தாசன் தலைமை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றிபெறும் வகையில் வாக்களித்த மக்களுக்கும் இதற்காக உழைத்த திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

இதன்பின்னர் 1000 பெண்களுக்கு புடவை, தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலaத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட அயலகஅணி தலைவர் லயன் எஸ்.டி.சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், பொருளாளர் ஆனந்தன்,நிர்வாகிகள் கே.செந்தில்குமார்,யூ.எஸ்.குறளரசன், இ.குமரவேல், ஏ.இந்துமதி, எம்.வஜ்ரவேல், கண்ணன், தினேஷ்குமார் கலந்துகொண்டனர். மாவட்ட பிரதிநிதிந.ராம்குமார் நன்றி கூறினார்.

 

The post திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: