740 கோடி வணிகம் நடந்ததாக போலி கணக்குகாட்டி 107 கோடி ஜி.எஸ்.டி சலுகை பெற்ற சென்னை தொழிலதிபர் கைது

சென்னை: போலி நிறுவனங்கள் மூலம் 740 கோடி வணிகம் நடந்ததாக கணக்கு காட்டி 107 ஜி.எஸ்.டி வரி சலுகை பெற்ற சென்னை தொழிலதிபரை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை கொடூங்கையூரை சேர்ந்த 54 வயது தொழிலதிபர் ஒருவர், தனது நிறுவனங்களில் 740 கோடி வணிகம் நடந்ததாக சென்னையில் உள்ள ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் கணக்குகாட்டியுள்ளார். அதன்படி அந்த தொழிலதிபர் 107 கோடி ஜிஎஸ்டி வரிசலுகை பெற்றுள்ளார். பின்னர் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொழிலதிபர் ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட தொழிலதிபர் இல்லாத நிறுவனத்தை இருப்பது போல், அந்த நிறுவனங்கள் மூலம் 740 கோடி வணிகம் நடந்துள்ளதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் ரவீந்தரநாத் உத்தரவுப்படி உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும் படி தொழிலபருக்கு சம்மன் அனுப்பட்டது. ஆனால் தொழிலதிபர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதைதொடாந்து ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று தலைமறைவாக இருந்த தொழிலதிபரை கைது செய்தனர்.

Related Stories: