மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. கேப்டன் பிஞ்ச் 16, ஸ்டாய்னிஸ் 43, லாபுஷேன் 21, ஸ்டார்க் 19* ரன் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்து அசத்தியது. மிட்செல் மார்ஷ் 73 ரன் (100 பந்து, 6 பவுண்டரி), மேக்ஸ்வெல் 77 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3, ரஷித் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.