திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: பக்தர்களுக்கு அனுமதியில்லை.!!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. இக்கோவிலில் ஆண்டு தொறும் நடைபெறும் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால், கொடியேற்றம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளினால் அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சுவாமி வீதி உலா, தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் முக்கிய நாட்களான 7-ம் திருவிழா (12-ந்தேதி), 8-ம் திருவிழா (13-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் திருவிழா நிகழ்வுகள் நீங்கலான இடைப்பட்ட நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் 10-ம் திருநாள் தேரோட்டம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://youtu.be/MjiiXtXHNVI என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Stories: