லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது : உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

லடாக் : லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி, தற்போது சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் - மே மாதம் முதல் இந்தியா - சீனா ஆகிய இரு நாட்டு எல்லையாக உள்ள, கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி) அருகே சீனா தனது ராணுவப் படைகளை குவித்து வருகிறது. இந்த நிலையில், டெப்சாங் சமவெளிகளில் இருந்து சூஷூல் பகுதி வரை சீனப் படைகள் முறையாக குவிக்கப்பட்டு வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லடாக்கின் டெப்சாங் சமவெள முதல் சுசுல் என்ற இடம் வரை சீன ராணுவம் திட்டமிட்ட அணித்திரட்டலை மேற்கொண்டுள்ளது. டெப்சாங் பள்ளத்தாக்கில் இந்தியா ரோந்து பணியில் ஈடுபடும் 10-13வது பாயிண்ட் பகுதியில் இந்திய – சீனா உண்மையான எல்லையில் இருந்து 900 சதுர கி.மீ பரப்புக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கில் 20 சதுர கி.மீ பரப்பும், ஹாட் ஸ்பிரிங் பகுதியில் 12 சதுர கி.மீ அளவும் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. பாங்கோங் த்சோவில் 65 சதுர கி.மீ பரப்பும், சுசுலில் 20 சதுர கி.மீ பரப்பும் அதன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது.

பாங்கோங்க் த்சோ ஏரி பகுதியில் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பிங்கர் 4-8க்கு இடைப்பட்ட தூரம், ஏரியைக் கடந்து செல்லும் மலைப்பகுதி என எட்டு கி.மீ தூரம் சீனா வசம் உள்ளது. இங்குதான் சர்வதேச எல்லை உள்ளதாக இந்தியா கருதியது. கடந்த மே மாதம் வரை இந்த பகுதியில் இந்திய, சீன துருப்புகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தன. தற்போது சீனா அதை ஆக்கிரமித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Related Stories: