சுங்க கட்டணம் உயர்வு குறித்து மக்கள் நிலையை ஆட்சியாளர்கள் என்று தான் புரிந்து கொள்வார்கள்: கனிமொழி எம்.பி. கேள்வி

தூத்துக்குடி: சுங்க கட்டணம் உயர்வு குறித்து மக்கள் நிலையை ஆட்சியாளர்கள் என்று தான் புரிந்து கொள்வார்கள் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்துள்ளது. எனவேவிக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 21 சுங்கசாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் ரூ.10 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் சுங்கக் கட்டண உயர்வுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கண்டணம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

இபாஸ் நடைமுறையால் மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யாமல் இருந்த நிலையில் இ-பாஸ் ரத்தால் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார். இந்நிலையில் பெருந்தொற்று காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என கனிமொழி எம்.பி சுட்டிக்காட்டினார். இச்சூழலில் கூட, சுங்க கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனம் இல்லாதவர்கள், விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: