கனடா நாட்டில் இனவெறி எதிர்ப்பாளர்கள் ஆவேசம்!: முதல் பிரதமர் ஜான் மெக்டொனால்ட் சிலை உடைப்பு..!!

ஒட்டாவா: கனடா நாட்டின் முதல் பிரதமர் சர் ஜான் மெக்டொனால்ட் சிலையை இனவெறி எதிர்ப்பாளர்கள் உடைத்து தள்ளியதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மாண்ட்ரீல்  நகரில் திரண்ட மக்கள், பேரணியாக சென்று இனவெறிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பின்னர் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலையை கயிறு கட்டி இழுத்து கீழே தள்ளினர்.

இந்த சம்பவத்தால் சர் ஜான் மெக்டொனால்ட் சிலை கீழே விழுந்ததில் தலைப்பாகம் மட்டும் துண்டாகி நடைபாதையில் உருண்டோடியது. இதனை பார்த்து இனவெறி எதிர்ப்பாளர்கள் கூச்சலிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். 1867ம் ஆண்டு முதல் 1891ம் ஆண்டு வரை 19 ஆண்டு காலம் கனடா நாட்டின் பிரதமராக இருந்த சர் ஜான் மெக்டொனால்ட், இனவெறிக்கு ஆதரவு தெரிவித்து பழங்குடியின மக்கள் மீது அடக்குமுறைகளை பாய்ச்சி சித்ரவதை செய்தார் என்பதே புகாராகும்.

பழங்குடியினத்தினர் குழந்தைகளை தனிமைப்படுத்தி தாய் மொழியை மறக்கடிக்க செய்தார் என்பதும் மேலும் அவர்களின் கலாச்சாரத்தை கடைபிடிப்பதை தடை செய்தார் என்பதும் குற்றச்சாட்டு. தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு உணவு கிடைக்காமல் தடைகளை ஏற்படுத்தி ஏராளமானவர்கள் மரணமடைய காரணமாக இருந்தார்கள் என்பதும் மற்றொரு புகார். கறுப்பு இனத்தவர்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு ஆர்பாட்டங்களுக்கிடையே கனடாவின் மாண்ட்ரீல் அமைந்துள்ள ஜான் மெக்டொனால்ட் சிலையானது ஆர்பாட்டக்காரர்களினால் கவிழ்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: