ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீக்கிரையான 108 ஆம்புலன்ஸ் - தென்காசி மருத்துவமனையில் பரபரப்பு..!!!

தென்காசி:  தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிகிச்சைக்காக செங்கோட்டை, கடையம், சுரண்டை, பாவூர்சத்திரம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகளை ஏற்றி செல்ல 10 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதில் சுமார் 2 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக இயங்கி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருக்கும்போது ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துள்ளானது. அதாவது, தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவசர மேல்சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவு 2 மணியளவில், கொரோனா நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றியபோது, திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பற்றியது.

இதன் பின்னர், ஆம்புலன்சில் இருந்த கொரோனா நோயாளியை, மருத்துவமனை ஊழியர்கள்  உடனடியாக கீழே இறக்கி அவரை காப்பாற்றினர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவலானது அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தன. இருப்பினும் இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் உட்பகுதி முழுவதும் எரிந்து தீக்கிரையானது. மேலும் துரிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்ததால், தீயணைப்பு வீரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனையடுத்து நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: