இந்தி திணிப்பை கண்டித்து எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: எல்ஐசியில் இந்தி திணிப்பை கண்டித்து முகவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசியில் விண்ணப்ப படிவங்கள் தமிழ், ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ஆன்லைன் விண்ணப்பம் என்ற பெயரில் தமிழ் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் மட்டுமே உள்ளது. இதனை கண்டித்து பொன்னேரியில் உள்ள எல்ஐசி அலுவலக வாயிலில் முகவர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசங்கள் அணிந்து கண்டன நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆன்லைன் என்ற பெயரில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. அனைத்து முகவர்களும் ஆங்கிலப் புலமையுடன் இருப்பவர்கள் அல்ல. தமிழ் நீக்கப்பட்டதால் இந்தி தெரியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும். எல்ஐசியில் உள்ள மத்திய அரசின் பங்குகள் தனியாருக்கு சென்றால் மக்களுக்கு எல்ஐசியின் மீதுள்ள நம்பகத்தன்மை பொய்யாகிவிடும்.  

கேரள அரசைப்போல தமிழக அரசும் எல்ஐசி முகவர்களுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முகவர்களுக்கு நலவாரியம் மூலமாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு சலுகைகளை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: