கைலாசம் நாட்டில் ஹோட்டல்களை திறப்பது எவ்வாறு?: நித்தியானந்தாவுக்கு தமிழக ஹோட்டல் உரிமையாளர் கடிதம்..!!

மதுரை: கைலாசாவில் ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி கேட்டு சாமியார் நித்தியானந்தாவுக்கு தமிழகர் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார். மதுரையை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனர் எழுதிய அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அக்கடிதத்தில், தாங்கள் சொன்னபடியே கைலாசா வில் தனிநாடு ஆரம்பித்ததோடு அல்லாமல், தனியாக பொற்காசு நாணயங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். தங்களுடைய தனித்திறமைகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்களது கைலாசா நாட்டில் எங்களது பிரபல ஹோட்டலை திறப்பதற்கு தங்களது அனுமதியை வேண்டி காத்திருக்கிறேன்.

இது உலகிலேயே மிக சிறந்த உணவை அங்கு வழங்கி தங்களது கைலாசா நாட்டை மேலும் வலுப்படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் எவ்வாறு மக்களை ஈர்க்க பக்தர்களை ஈர்க்கும் புதிய உத்தியை கையாளுகிறீர்களோ அதுபோல் நாங்களும் மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை என்று பல உத்திகளை கையாண்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கைலாசா நாட்டுக்கான நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.

தமது நாட்டு நாணயங்கள் யாவும் தங்கத்தால் ஆனவை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். கைலாசா நாட்டுக்கு என ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டுள்ளதாகவும் 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையும் தயாராக இருப்பதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார். பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட அவர், இணையதளம் மூலம் அவ்வப்போது பேசி வருகிறார். தீவு ஒன்றினை வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு அதை தனி நாடாக நித்தியானந்தா பிரகடனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: