தென் சீன கடலில் சீனா அடாவடி இந்தியாவிடம் வியட்நாம் முறையீடு

புதுடெல்லி: தென் சீன கடல் பகுதியில் போர் கப்பல்களை நிலைநிறுத்தி சீனா அடாவடித்தனம் செய்வதாக வியட்நாம் அரசு இந்தியாவிடம் முறையிட்டுள்ளது. இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில், வியட்நாம் தூதர் பாம் சான் சாஸ், மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லாவை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தென் சீன கடல் உட்பட வியட்நாம் கடல் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து அந்நாட்டு தூதர் விளக்கினார். அங்குதான் இந்தியாவின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் ஆய்வு திட்டப்பணிகள் நடக்கின்றன.

அதோடு, தென் சீன கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய பார்சல் தீவின் உட்டி பகுதியில் சீனா கடந்த ஒருமாதமாக தனது அதிநவீன போர்க்கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் வியட்நாம் தூதர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்சல் தீவை வியட்நாம் சொந்தம் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: