டாஸ்மாக் கடைக்கு அனுமதி விநாயகர் சிலை வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பா? பாஜ கேள்வி

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தேர்வு என்ற புதிய நடைமுறை இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால் விநாயகர் வழிபாட்டுக்கு மறுக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்து முன்னணியினரின் முழு நடவடிக்கைக்கு பாஜ ஆதரவு கொடுக்கும். தமிழக அரசு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: