கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் போர்வெல் மூலம் நிரம்பும் அழகர்கோவில் தெப்பம்

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அழகர்கோவில் நிர்வாகத்திற்கு தெப்பம் பொய்கைகரைப்பட்டியில் உள்ளது. இந்த தெப்பத்தில் தான் மாசி மாதம் கள்ளழகர் (எ) சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அழகர்மலையில் பெய்யும்  மழைநீர் இந்த தெப்பத்திற்கு வரும் வகையில் இயற்கையாகவே வரத்து கால்வாய் அமைந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் இந்த கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் போனது. இதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக தெப்பத்திற்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு மைதானம் போல் காட்சியளித்தது. இதனால் ஆண்டுதோறும் தெப்ப தண்ணீரில் மிதக்க வேண்டிய கள்ளழகர் கரையைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 இந்த நிலையில் கடந்த ஆண்டு மதுரைகிழக்கு  எம்எல்ஏ மூர்த்தி முயற்சியால் ராட்சத போர்வெல் அமைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது தெப்பத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் இந்தாண்டு மாசி திருவிழாவின் கள்ளழகர் (எ) சுந்தரராஜ பெருமாள் தெப்பத் தேரில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: