வலங்கைமான் ஒழுங்கு விற்பனை கூடத்தில் பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.5,450க்கு ஏலம்

வலங்கைமான்: வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் கடந்த 14ம்தேதி நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில்பருத்தி அதிகபட்ச விலையாக ரூ. 5 ஆயிரத்து 450 க்கு ஏலம் போனது .712குவிண்டால் பருத்தி 36 லட்சத்து 36 ஆயிரத்து 793 க்கு கொள்முதல் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்குப் பிறகு கோடை சாகுபடி ஆக பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட ஆதிச்சமங்கலம் .செம்மங்குடி. பாடகச்சேரி சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி பெருங்குடி நரசிங்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் எக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு மகசூல் எடுக்கப்பட்டு வருகின்றது.

மகசூல் செய்யப்பட்ட பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 14ம்தேதி பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயலாளர் வித்யா தலைமையில் மேற்பார்வையாளர் வீராச்சாமி மேற்பார்வையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் இந்திய பருத்தி கழகம் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் 5ஆயிரத்து 450 க்கும் குறைந்த பட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து239 க்கும் சராசரி விலையாக ரூ.5ஆயிரத்து 85க்கு போனது . மொத்தம்712 குவிண்டால் பருத்தி 36 லட்சத்து 36 ஆயிரத்து 793 க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பருத்தி மகசூல் முடிவுறும் தருவாயில் உள்ளதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு பருத்தி குறைவாகவே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது,

Related Stories: