விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆயுதப்படை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலராக பணியாற்றி வந்த 25 வயதான ஏழுமலை உயிரை மாய்த்து கொண்டவராவார். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவர் தனது அறையில் போல்ட் ஆக்க்ஷன் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இதனையடுத்து சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஏழுமலை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் மற்ற காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர் ஏழுமலை ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர். மேலும் திருமணம் ஆகாதவர். கடந்த 3 மாதத்திற்கு முன் விபத்தில் தலையில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இதனைக்கொண்டு முதற்கட்டமாக மன அழுத்தம் காரணமாக ஏழுமலை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவம் பணி சுமையால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என போலீசார் பல கோணத்தில் விசாரணையை  தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அக்குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: