‘நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்கவேண்டாம்’ மணல் கடத்தல் தொடர்பாக பதிவு செய்த வழக்குகள் எத்தனை? தமிழக அரசிடம் விவரம் கேட்கிறது ஐகோர்ட் கிளை

மதுரை: மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கேட்ட ஐகோர்ட், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சிவலூரைச் சேர்ந்த முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில், மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்கக்கோரி தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன.

இவ்வழக்கில் தமிழக தலைமைச்செயலர், தொழில்துறையின் முதன்மைச்செயலர் ஆகியோரை நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. தூத்துக்குடி கலெக்டரும், காவல்துறை கண்காணிப்பாளரும் உடன்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மணல் எடுப்பது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பதில்மனுக்களை தாக்கல் செய்யவேண்டும். மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன என்பது தொடர்பாக பதில்மனுக்களை இவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: