ரூ.2.28 கோடி நிதியில் கொடைக்கானல் ஏரியை சுற்றி அழகுபடுத்தும் பணி

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியை சுற்றி 2 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் சுற்றுலா நகரின் இதயம் போன்ற ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதைகள், மின்விளக்குகள் உள்ளிட்டவைகள் பல இடங்களில் சேதமடைந்து இருப்பதாக அவ்வப்போது நகராட்சிக்கு புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து சுங்க நிதியின் கீழ் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு ஏரியைச் சுற்றி உள்ள சேதமடைந்த நடைபாதைகள் சீரமைக்கும் பணியும், அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியும் ஏரியை சுற்றி நவீன குப்பை தொட்டிகள் அமைக்கும் பணியும் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் நகராட்சி உதவி பொறியாளர் பட்டுராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: