இந்தியா - சீனா மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தான்..!!

இஸ்லாமாபாத்: இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், எல்லை சர்ச்சை குறித்து சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பும் சமூக வலைத்தள கணக்குகள் பெரும்பான்மையானவை பாகிஸ்தானில் இருந்து இயங்குவது தெரியவந்துள்ளது. இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவிய போது ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூ - டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்திய மற்றும் சீன மொழிகளில் பல்வேறு விதமான தகவல்கள் பரப்பப்பட்டன.

இவற்றில் ட்விட்டரில் சீன மொழிகளில் பரப்பப்பட்ட தகவல்களில் பல பாகிஸ்தான் நாட்டு கணக்குகளில் இருந்து பதிவிடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பதிவு செய்யப்பட்ட பல ட்விட்டர் கணக்குகளின் புரொஃபைல் பெயர்கள் மாற்றப்பட்டு சீன மொழியில் பதிவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. zeping என்ற புரொஃபைல் கொண்ட கணக்கு xiuying 637 போன்ற பல கணக்குகள் முன்னர் வேறு பெயர்களில் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கணக்குகள் பற்றிய சுயவிவர பகுதிகளும் உருது மொழியில் இருந்து சீன மொழிக்கு மாற்றப்பட்டு தவறான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் மூலம் நடைபெறாத மோதல்களை நடைபெற்றதாக போலியான புகைப்படங்கள் மற்றும் பழைய வீடியோக்களுடன் செய்திகள் பரப்பப்பட்டன. இது இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட திட்டமிட்ட சதி என கருதப்படுகிறது.

Related Stories:

>