சுகாதாரத்துறை செயலர் ஆய்வின்போது தற்காலிக நகராட்சி ஊழியர்களை பொதுமக்களாக மாற்றி நாடகம்: பிரச்னையை தவிர்க்க அதிகாரிகள் ஏற்பாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலர் ஆய்வு மேற்கொள்ள வந்தபோது நகராட்சியின் தற்காலிக பணியாளர்களை முகாம்களில் பொது மக்களாக உட்காரவைத்து காஞ்சிபுரம் பெருநகராட்சி. ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (ஆக.1) வந்திருந்தார். அப்போது காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் ஏகம்பன் தெருவில் நகராட்சி சார்பில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு முகாமை ஆய்வு செய்யச் சென்றார்.

ஆய்வு மேற்கொள்ள வந்த சுகாதார செயலாளர் அங்கு உட்கார்ந்திருந்தவர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு எவ்வாறு என்பது குறித்து பத்து நிமிடம் விளக்கிக் கூறினார். இதில் இதில் அங்கிருந்தவர்களிடம் சில கேள்விகளையும் கேட்டு அவர்களிடம் பதில் வாங்கினார். அங்கு அமர்ந்திருந்த அனைவரும் பெருநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்ட  தற்காலிக பணியாளர்கள். பொதுமக்கள் இல்லையென்றால் அதிகாரிகள் சத்தம் போடுவார்கள் என பெருநகராட்சி இதுபோன்ற செயலில் மேற்கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாவட்ட கலெக்டர், சப் கலெக்டர் பலர் உடனிருந்தும் தைரியமாக தற்காலிக பணியாளர்களின் அடையாள அட்டையை மடித்து வைத்துக்கொண்டு அதிகாரி வருகிறார்கள் உட்காருங்கள் என நகராட்சி ஊழியர் கூறியதும் அவர்களும் செய்வதறியாது திகைத்து அதிகாரி முன் பொதுமக்கள் போல உட்கார்ந்து கொண்டனர். பின்னர் சுகாதாரத்துறை செயலாளரரின் அறிவுரையை கேட்டனர். இதை அறியாத சுகாதார செயலர் அவர்களுக்கு கொரோனா குறித்து 10 நிமிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் பெருநகராட்சியில் அதிகம் தொற்று பாதிக்கப்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் காஞ்சிபுரம் நகராட்சி போலியாக ஆட்களை வைத்து பொதுமக்களை போல அதிகாரிகளை ஏமாற்றியது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: