பாலபாஸ்கர் மரண வழக்கிலும் சிக்குகிறாரா ஸ்வப்னா சுரேஷ்? கேரள தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திடீர் திருப்பம்

திருவனந்தபுரம் கேரளாவில் துணைத்தூதரகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தங்கக்கடத்தல் வழக்கில் துணைத்தூதரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கேரள சுங்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. தங்கக்கடத்தல் வழக்கில் சூத்ரதாரியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது நண்பர் சந்தீப்பை 5 நாட்கள் காவலில் எடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதர் ரிஷீத்துக்கும், தங்கக்கடத்தலில் பெரும் பங்கு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் ஆகியோர் திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளனர். துணைத்தூதர் ரஷீத், தங்களிடம் இருந்து ஒவ்வொரு முறையும் 1,500 டாலர் லஞ்சம் பெற்றதாக ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 23 முறை துணைத்தூதரகம் முகவரியை பயன்படுத்தி தங்கக் கடத்தில் ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வாரம் துணைத்தூதர் துபாய் சென்றுவிட்ட நிலையில், அவருக்கு டாலராக பணத்தை வழங்க உதவியதாக கரன்சி மாற்றும் நிறுவனம் நடத்தி வரும் ஒரு முக்கிய நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். துணைத்தூதுரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் அதற்கு அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு சுங்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு கார் விபத்தில் பிரபல வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மற்றும் அவரது ஒன்றரை வயது மகள் இறந்ததில் தங்கக்கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக பாலபாஸ்கரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளதால் விசாரணை மற்றொரு திடுக்கிடும் கோணத்திலும் செல்ல தொடங்கியுள்ளது.

Related Stories: