பெருங்குடியில் முன்னறிவிப்பு இல்லாமல் சுங்க கட்டணம் வசூல்: வாகன ஒட்டிகள் குற்றச்சாட்டு

துரைப்பாக்கம்: கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்ல கூடிய ராஜிவ்காந்தி சாலையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் உள்ள சுங்கசாவடி மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக மூடி கிடந்த சுங்க சாவடி நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனால் வெறிச்சோடி கிடந்த சுங்க சாவடி வாகன நெரிச்சலுடன் காணப்பட்டது. அப்போது சிலர், “திடீரென சுங்க சாவடியை திறந்ததால் எங்களிடம் பணம் இல்லை” என்று கூறினர். இதனால் அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென சுங்கச்சாவடி திறக்கப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், ஊரடங்கு காலம் முடியும் வரை சுங்க சாவடியை கட்டணமில்லாமல் பயன்படுத்த அரசு உதவ வேண்டும் என்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: