தமிழகம் முழுவதும் 1196 நடமாடும் மருத்துவமனைகள் இயக்கம்...! வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்பலாம்; முதல்வர் பழனிசாமி உரை

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதற்கான தடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட தளர்வுகள் வழங்குவது குறித்தும் ஆட்சியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது;

* தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தினால் கொரோனா இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது.

* குடிமராமத்து பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

* சென்னையில் 25,532 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது

* ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது.

* வரும் 5-ம் தேதியில் இருந்து நியாய விலைக்கடைகளில் முகக்கவசங்கள் வழங்கப்படும்.

* சென்னையில் கொரோனா பரவலை கடுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு.

* மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.

* அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

* கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் உள்ளன.

* அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

* அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்.

* அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  மாவட்ட ஆட்சியர்கள்  சிகிச்சை பெற்று விரைவில் நலமுடன் வர வேண்டும்.

* வெளிமாநில தொழிலாளர்களை பரிசோதனை செய்து பணியில் அமர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் 50% பணியாளர்களுடனும், பிற மாவட்டங்களில் 100% பணியாளர்களுடனும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா தடுப்புப் பணிகளில் 20,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; தமிழகம் முழுவதும் 1196 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகையும் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன; மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: