ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு விதம் அவதாரம் எடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி: மண்டை குழப்பும் ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள யாலே பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். யாலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 113 கொரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்காக பரிசோதனை செய்யப்பட்டனர். இதில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்து மருத்துவமனையில் தங்கியிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை அல்லது இறக்கும் தருணம் வரையிலான கால கட்டத்தில் அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி, சிகிச்சையின் போது ஒவ்வொரு விதமாக செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, சிலர் மிகவும் ஆபத்தான நிலைக்கு செல்கின்றனர். இந்த வேறுபாடுகளை ஆய்வு செய்து அறிவதின் மூலம், இந்நோயால் இறக்கக் கூடிய நிலைக்கு செல்லக் கூடியவர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சார்ஸ் மற்றும் கோவிட்- 19க்கு எதிராக, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த ஆய்வின் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியின் மாற்றங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டால்,  கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: